Republic Day Wishes In Tamil 2024

Republic Day Wishes in Tamil – இந்த ஆண்டு நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் குடியரசு தின விழாவை கொண்டாடி மகிழ, உங்களுக்காக இங்கே ஒரு அழகான குடியரசு தின வாழ்த்து Republic day wishes in Tamil தொகுப்புகள்.

Republic Day Quotes In Tamil

Republic Day Quotes In Tamil
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தேசம் நம் தேசம்
நெடுந் புகழ் ஓங்கியொளி வீசும்
அன்பின் வழியில் நாம் சென்றோம்
அஹிம்சையால் அதை வென்றோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


அரசியலமைப்பு அமெரிக்க கொடுத்தது
நம்பிக்கை, சுதந்திரம் சமாதானம் ஒரு பெருமை
எனவே அது உருவாக்கப்பட்ட நாளை மதித்து
ஒரு புன்னகையுடன்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


ஈகையும் இரக்கமும் இணைந்து இன்று
பகையை வெல்வோம் நட்பால் நன்று
ஒற்றுமை அன்பினை அனைத்து நின்று
வேற்றுமை வென்றால் உண்டு மலர்ச்செண்டு
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Republic Day Quotes In Tamil Text
Tamil Happy Republic Day Quotes

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்
நம்தேசக் கொடிதனை ஏற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


பட்டொளி வீசி பறக்கக் காணீர்
பாரத புகழ்க்கொடி சிறக்கக் காணீர்
செப்பும் செம்மொழிகளை சரம் தொடுத்து
பாரத மாதாவுக்கு மாலை சூட வாரீர்
அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்தோம்
மனிதச் சங்கிலி என்னும் மகத்துவத்தால்
புனித பாரதம் காக்க புறப்படுவோம்
இனிய இந்தியா இன்புற்று வாழியவே
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


தன் வம்சா வழியினர்கள் வசந்தமாய் வாழ
தன் வாழ்நாட்களை வலியுடன்
கழித்தவர்களை வருத்தமுடன் நினைக்க
சுதந்திரக்காற்றை நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம் தூக்கியெறிந்த
தியாகிகளின் ஒரு தியாக தினம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Happy Republic Day Wishes in English

Happy Republic Day Wishes In Telugu

Republic Day Wishes In Kannada

Republic Day Wishes For Students in Tamil

Republic Day Wishes For Students in Tamil
Republic Day Wishes For Students in Tamil

நாவாலே புகழ்மணக்க நாமெல்லாம் போற்றிட
நல்லாட்சி குடியரசு நம் வீட்டு விழாவாக
பாவாலே புகழ்ப்பாடு பாரதம் போற்றிடு
பாரினில் உயர்ந்திட பன்பாடு காத்திடு
மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


தேசீய ஒற்றுமை தாங்கிய மணிக்கொடி
தேரனெ அசைந்திட
தியாகத்தை காட்டுது
நேசிக்கும் நாட்டினை நெஞ்சினில் வைத்திட
நெகிழ்ந்திடும் உணர்வினை நிறைவாக கூட்டுது
வீசிடும் முப்படையும் வீரநடை காட்டிட வெற்றியென
அணிவகுப்பு வீரத்தை ஊட்டுது
ஆசிய மண்ணினில் அகிம்சையை கொண்டிட
அத்தனைத் துறையிலும் ஆக்கத்தைத் தீட்டுது
மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


முக்கடல் சூழலாய் முகிலோடு இமயமும்
முன்னேற்ற இந்தியா பகமையை பந்தாடும்
மூவண்ண கொடியோடு முத்திரை சக்கரமும்
மூச்சென தாய்நாட்டில் முழுநிலவாய் வீசிடும்
பூவாலே மாலையிட்டு புன்னகையால் கோலமிட்டு
பொன்னாக வரவேற்க பூவுலகம் பேசிடும்
மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Republic Day Wishes in Tamil For Student

Republic Day Wishes in Tamil For Student
Republic Day Wishes For Students in Image

வாழ்க இந்திய குடியரசு
வீழ்க ஊழலும் அராஜகமும்
மாணவர்களுக்கு இனிய குடியரசு
தின வாழ்த்துக்கள்


அன்னியரின் அடிமை ஆட்சி அகன்று
அன்னை தேசத்தின் முடியாட்சி தோழர்களே
உங்களின் உள் இருக்கும் ஆக்க சக்தி
வளமான வாழ்க்கைக்கு பயன்படுத்து உன் புத்தி
வாழ்கின்ற சூழ்நிலையை பார் சுற்றி
நான் பேசுகின்றேன் உன் எதிர்காலத்தைபற்றி
சுதந்திரத்தின் காற்றை நீ சுவாசி
மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


மக்களாட்சி தத்துவ மகிமையில் திளைத்திட
மாபெரும் குடியரசு மனங்களில் நின்றாடும்
பக்கத்து நாட்டோரும் பகையிலா நட்புறவால்
பாரதம் வந்திட பாங்குடனே கொண்டாடும்
திக்கெட்டும் தாய்நாடு திருநாளைக் கண்டிட
தீரர்களின் சுதந்திர தியாகமும் வந்தாடும்
வளர்க பாரதம்! வெல்க பாரதம்
மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Happy Republic Day Quotes in Hindi 

Republic Day Wishes Status For Friend’s in Tamil

Republic Day Wishes Status For Friend's in Tamil
Republic Day Wishes Status For Friend’s in Tamil

வரி மறுத்து மேலை உடை வெறுத்து
செக்கிழுத்து உயிர்சிதைந்து, துயர
பல தாண்டி பெற்ற உயிர்
தழைத்து நிற்குமிந்த சுதந்திரப் பயிர்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


சட்டங்களை எதிர்த்தும் பட்டங்களை துறந்தும்
உன் கொட்டங்களை அடக்கினோமடா
போட்டிக்கு அடி பணியாத ஆங்கிலேயன்
பாரதியின் பாட்டுக்கு அடிபணிந்தானே
இம்சைக்கு இனங்காத இனவெறியன்
காந்தியின் அஹிம்சைக்கு அடிபணிந்தானே
பஞ்சம் பிழைக்க வந்த பரங்கியனே
இனி உன்படம் இங்கு ஓடாது, ஓட்டமெடு
உன் தேசத்திற்கு


அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம்
மிஞ்சி பேசி மாய்ந்த சோகம்
உயிர்வதைய இறுதி வரை
நிலைத்த தியாகம்
ரத்தமும் சதையுமாய் உறவிழந்து
கதறிய கண்ணீர் கோலம்
இவைகள் மொத்தத்திற்குமான
முற்றுப்புள்ளி வீர சுதந்திரம்
வளர்க பாரதம்! வெல்க பாரதம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Republic Day Wishes in Tamil For Friends

Republic Day Wishes in Tamil For Friends
Republic Day Wishes For Friend’s

முன்னோர்தம் தியாகம் அறிவோம்
அவர்களின்றி ஏது இந்த அளவிடற்கரிய ஆனந்தம்?
அவர்களால் இன்று தேசம் நமக்குச் சொந்தம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


வெள்ளையனே உன்சாயம் வெளுத்துப் போச்சு
அவனுக்கு எதிராக உப்பினைக்காச்சு
இனி உனக்கில்லை மரியாதைப் பேச்சு
முழு சுதந்திரமே எங்கள் உயிர் மூச்சு
உயிர் மூச்சு! உயிர் மூச்சு! உயிர்மூச்சு
வளர்க பாரதம்! வெல்க பாரதம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


உரிமைகள் தொலைத்து உயிர் பல கொடுத்து
போராடி கண்ட பெருவிழா
நம் ஒவ்வொருவருக்குமான திருவிழா
வளர்க பாரதம்! வெல்க பாரதம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Republic Day Quotes For Children in Tamil

Republic Day Quotes For Children in Tamil
Republic Day Quotes For Children in Tamil

சுதந்திர காற்றை சுகமாய் அனுபவிக்கும்
நம் சுதந்திர கொடி போல்
நாமும் நமக்காக பாடுபட்டு வாங்கித்தந்ததை
பத்திரப்படுத்தி வாழ்வோமாக
வளர்க பாரதம்! வெல்க பாரதம்
குழந்தைகளுக்கு இனிய குடியரசு
தின வாழ்த்துக்கள்


நாட்டை நினைக்கும்போது நாட்டுக்காக
போராடியவர்களையும் நினைவு கூறுவோமாக
அத்தனை பேரையும் புகழ்ந்து போற்றுவோம்!
எந்தாய் திருநாட்டில் வாழும் கோடான
கோடி மக்களுக்கும்
உலகம்முழுவதும் இருக்கும் என்
இந்திய குழந்தைகளுக்கு
என் அன்பான குடியரசு தின வாழ்த்துகள்


விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது குடியரசு
பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்
அனைவரின் உள்ளத்தைச்
சமப்படுத்தியது குடியரசு
இந்த உரிமைக்குரிய
நாளை போற்றிடுவோம்
குழந்தைகளுக்கு இனிய
குடியரசு தின வாழ்த்துக்கள்


Republic Day Wishes in Tamil For Children

Republic Day Wishes in Tamil For children
Happy Republic Day For Children

மன்னர்கள் காலத்தில் முடியரசு
என்றுமே போற்றத்தக்கது நம் குடியரசு
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின
வாழ்த்துக்கள்


நாட்டுப்பண் பாடியதும் உடல்
நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி
குழந்தைகளுக்கு இனிய குடியரசு
தின வாழ்த்துக்கள்


நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்
விடியலை நோக்கி செல்கின்றோம்
வேகம் கொஞ்சம் குறைவுதான்
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை
தயங்கி நிற்கவும் போவதில்லை
பயணம் என்றும் தொடரும்
விடியலை வென்றும் காண்போம்
குழந்தைகளுக்கு இனிய குடியரசு
தின வாழ்த்துக்கள்


Republic Day Wishes In Tamil for Parents

Republic Day Wishes In Tamil for Parents
Republic Day Wishes In Tamil for Parents

குடியரசு தேசம் நம் தேசம்
நெடுந் புகழ் ஓங்கியொளி வீசும்
அன்பின் வழியில் நாம் சென்றோம்
அஹிம்சையால் அதை வென்றோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


பட்டொளி வீசி பறக்கக் காணீர்
பாரத புகழ்க்கொடி சிறக்கக் காணீர்
செப்பும் செம்மொழிகளை சரம் தொடுத்து
பாரத மாதாவுக்கு மாலை சூட வாரீர்
அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்தோம்
மனிதச் சங்கிலி என்னும் மகத்துவத்தால்
புனித பாரதம் காக்க புறப்படுவோம்
இனிய இந்தியா இன்புற்று வாழியவே
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


அடக்கு முறை செய்த அன்னிய
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும் அறவழியில்
வெற்றிவாகை சூடிய தினம்
உப்பு சத்தியாகிரகங்களால்
தன் உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு பெருமைத்தேடித்தந்த தினம்
தன் குருதிகளையும் தன்
தேகங்களையும் தன் தாய்நாட்டிற்காக
அர்ப்பணம் செய்தவர்களை நினைவுக்கூறும் தினம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Republic Day Wishes Image in Tamil

Republic Day Wishes  image in Tamil
Republic Day Wishes image in Tamil

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்
நம்தேசக் கொடிதனை ஏற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


ஈகையும் இரக்கமும் இணைந்து இன்று
பகையை வெல்வோம் நட்பால் நன்று
ஒற்றுமை அன்பினை அனைத்து நின்று
வேற்றுமை வென்றால் உண்டு மலர்ச்செண்டு
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


நம் தாய்நாட்டினை அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாடுபட்டவர்களை இன்றுமட்டும்
நினைப்பதில் நியாயமில்லை
எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தார்களோ
அதை கண்ணியத்துடன் காத்துக்கொள்ள
வேண்டியது நம் கடமை
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Inspiring Republic Day Text in Tamil Quotes

Inspiring Republic Day Text in Tamil Quotes
Inspiring Republic Day Text in Tamil Quotes

பண்பாட்டு போராளிகளே
பண்பட்டு செயல்படுங்கள்
உரிமைக்காக புண்படவும்
தயாராகுங்கள்
நம் நாடு உங்களால் உண்மையான
குடியரசு நாடாகட்டும்
இளைஞர்களுக்கு இனிய
குடியரசு தின வாழ்த்துக்கள்


பேயவள் காண் எங்கள் தாய் பெரும்
பித்துடையாள் எங்கள் தாய்
காயழல் ஏந்திய கையன் தன்னைக்
காதலிப்பாள் எங்கள் தாய்
காளைக்காக போராடிய காளைகளே
இன்று உங்களின் கொம்புகள் கூர்தீட்டப்படட்டும்
வலியின்றி கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை
அன்று சுதந்திரத்திற்காகப் போராடிய
குருதிகளின் ..மிச்சம் நீங்கள்
எங்களின் எதிர்கால நம்பிக்கைகளே
உணர்வு பெற்று
உள்ளம் தெளிந்தவர்களே
இத்தேசத்தின் எதிர்காலம் உங்கள் கையில்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


முழுசுதந்திரமே எங்கள் உயிர்மூச்சு
மூவர்ண கொடி காண
முன்னூற்றைம்பது ஆண்டுகள் அடிமைகளாக
எத்தனை உயிர்கள் கொடுத்திருப்போம்
எத்தனை உணர்வுகள் இழந்திருப்போம்
சில விதைகள் பலிகளாக, பல விதைகள் வலிகளாக
உடல் மண்ணிலே வீழ்ந்தாலும்
கொடியினை மார்பிலே சுமந்தோமடா
வளர்க பாரதம்! வெல்க பாரதம்


Inspiring Republic Day Quotes in Tamil
Inspiring Republic Day Quotes in Tamil Greeting

சுதந்திரத்திற்காக இன்றும் களம்
இறங்க காத்திருக்கும் போராளிகளே
வடிவமையுங்கள் உங்களை
மனதால் இணைந்த மகிழம் பூக்களே
மணத்தால் அழியுங்கள் கயவர்களை
ஒருவிரலால் விரட்டும் காலம் வரும்
ஓயாமல் காத்திருங்கள்
இளைஞர்களுக்கு இனிய
குடியரசு தின வாழ்த்துக்கள்


சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை
சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை
பளிச்சென்ற பகலிலும் பனிவிழும் இரவிலும்
முப்பொழுதிலும் எப்பொழுதிலும்
இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு
ஆங்கிலேயனிடம் அடிமையானது
அறியாமையினால், வளமையை
விட்டது புரியாமையினால்
மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல்
இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை
அழைத்து மரியாதை செய்து வளம்
பெருக்கி வானுலகம்
போற்ற வல்லரசாக்கி இந்தியாவை
இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்
பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்
அனைவருக்கும் பயனுள்ளதாய் மாற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


துயரின்றி நாம் வாழ துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில் இதய அஞ்சலியை செலுத்துவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Motivating Republic Day Quotes in Tamil

Motivating Republic Day Quotes in Tamil
Motivating Republic Day Quotes in Tamil

உயிர் ஓட்டத்திலும், விடும் மூச்சினிலும்
பறக்குது பார் எங்கள் சுதந்திரம்
விண்ணில் பறக்குது பார் எங்கள் சுதந்திரம்
வளர்க பாரதம்! வெல்க பாரதம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


தலைப்புச் செய்தி – நினைவூட்ட
மந்திரத்தாலும், தந்திரத்தாலும்
பெற்றதல்ல எங்கள் சுதந்திரம்
உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும்
கிடைத்தது எங்கள் சுதந்திரம்
மாயத்திலும், துளி நிமிடத்திலும்
அடைந்ததல்ல எங்கள் சுதந்திரம்;
காயத்திலும், கடல் போரிலும்கண்டது
எங்கள் சுதந்திரம்
இந்த சுதந்திரத்தை என்றும்
போற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது
வாழ்த்துக்கள். நமது நிலப்பகுதி, கடல் பகுதி
வான்பகுதிகளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்
ஆயுதப்படை வீரர்கள், மத்திய மாநிலங்களின்
காவல் துறையினருக்கும், உள்நாட்டில்
பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எனது
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்


Republic Day Greetings in Tamil

Motivating Republic Day Quotes
Tamil Republic Day Quotes

குடியரசு தேசம் நம் தேசம்
நெடுந் புகழ் ஓங்கியொளி வீசும்
அன்பின் வழியில் நாம் சென்றோம்
அஹிம்சையால் அதை வென்றோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


அன்று முதல் இன்று வரை முடிவை எட்டா தீப ஒளியாய்
வேற்றுமையில் ஒற்றுமை நம்மோடும் நம் உணர்வோடும்
தினமும் பயணம் செய்ய வழி வகுத்த அரசியல் அமைப்போடு
அனைவரும் பயணிப்போம்!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!


கோபத்திலும், வெறும் வாதத்திலும்
பெற்றதல்ல இந்த சுதந்திரம்
வீரத்திலும், விவேகத்திலும்
விளைந்தது இந்த சுதந்திரம்
ஏக்கத்திலும், தூக்கத்திலும்
விழித்ததல்ல இந்த சுதந்திரம்
கவி ஏற்றத்திலும், கனவு மாற்றத்திலும்
விடிந்தது இந்த சுதந்திரம்
வளர்க பாரதம்! வெல்க பாரதம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Republic Day Messages in Tamil Image

Republic Day Messages in Tamil Image
26 January Happy Republic Day Messages

நாட்டின் அனைத்து மக்களும்
அடிப்படைத் தேவைகளைப் பெற்றிட
அனைவருக்கும் சமச்சீரான
வாழ்க்கை கிட்டிட
நாம் இன்று உறுதி கூறுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


நம் நாடு உலகில் உயர்ந்தது என
உறுதியாய் நம்புவோம்
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை
அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


அனைவருக்கும் குடியரசு தின
வாழ்த்துக்கள் உரித்தாகுக
வாழ்க இந்திய குடியரசு
வீழ்க ஊழலும் அராஜகமும்
உயிரினை ஈந்தும் பாரத நாட்டின்
உயர்வினைக் காப்போம்
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


Republic Day SMS in Tamil

Republic Day SMS in Tamil
Republic Day SMS in Tamil

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்
நம்தேசக் கொடிதனை ஏற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த
கறை படிந்த சூழலை மாற்ற நாம்
இன்று சபதம் ஏற்போம்
நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்களில்
கேள்விக்குறியாகி இருக்கும்
நிலையை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


எத்தனை எத்தனை தடியடிகள்
எண்ணிலடங்கா கசையடிகள்
இப்படித்தான் கழிந்தன பல நொடிகள்
அதை நொறுக்கிக் கண்ட பொன் விடியல்
உயிர் இனிக்கும் இந்த சுதந்திரப்படையல்
வளர்க பாரதம்! வெல்க பாரதம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


Leave a Comment